
ஜியோ ஹாட்ஸ்டாரின் மெடிக்கல் தொடரான 'ஹார்ட் பீட்' வெப் தொடரின் 3-வது பாகம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்தத் தொடரில் டாக்டர் ரீனாவாக தீபா பாலு, டாக்டர் ராதியாக அனுமோல், அர்ஜுனாக சாருகேஷ் சேகர் மற்றும் டாக்டர் விஜய்யாக கார்த்திக் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஆர்.கே ஹாஸ்பிடலில் நடக்கும் உணர்ச்சிப் போராட்டங்களை மையமாகக் கொண்ட இந்தத் தொடரை தீபக் சுந்தர்ராஜன், அப்துல் கபீஸ் மற்றும் சிதம்பரம் மணிவண்ணன் உருவாக்கியுள்ளனர்.