
பழனி தண்டபாணி அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் உயிரிழந்தார்.
கடந்த மாதம் 15-ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில், 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
நேற்று இரவு 12.30 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டதால் உயிரிழந்த வழக்கறிஞரின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.