
டொரண்டோவில் நடைபெற்று வரும் கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி வெற்றி பெற்றுள்ளது.
முதல் சுற்றில் பிரிட்டனின் நீல் ஸ்கப்சி-அமெரிக்காவின் கிறிஸ்டியன் ஹாரிசன் ஜோடியை எதிர்கொண்ட யூகி பாம்ப்ரி ஜோடி, முதல் செட்டை இழந்தாலும் அடுத்த இரு செட்களை வென்றது.
போட்டியின் முடிவில் யூகி பாம்ப்ரி ஜோடி 6-7 (9-11), 6-4, 10-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.