
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ரேஷன் கார்டுதாரர்களுக்கான கைவிரல் ரேகைப்பதிவு சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது.
தேர்தல்கள் நடத்தப்படும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளைத் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.
ஆதார் விவரங்களை சரிபார்க்கும் பொருட்டு முன்னுரிமை ரேஷன் அட்டைகளில் இதுவரை 96.21 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 100 சதவீதம் நிறைவு செய்ய இந்த முகாம் நடத்தப்படுகிறது.