
சீனாவின் ஷென்சென் நகரில் வரும் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கவுள்ள சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரிலிருந்து பி.வி.சிந்து மற்றும் ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் விலகியுள்ளனர்.
காயம் காரணமாக இந்த முன்னணி இந்திய வீரர்கள் இருவரும் இத்தொடரில் பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரின் மூன்றாவது சுற்றில் பி.வி.சிந்து வெளியேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.