
தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் நவம்பர் 1-ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பெயர் பலகையில் தமிழ் பெயருக்குக் கீழ் ஆங்கிலத்தில் பெயர் வைக்கலாம், தவறினால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில், நீதிபதி சுரேந்தர் இந்த காலக்கெடுவை கடைசி வாய்ப்பாக வழங்கியுள்ளார்.