
தமிழ்நாட்டில் நகரப்பகுதிகளில் உள்ள சுமார் 2500 மதுக்கடைகளைத் தனியார் மயமாக்க அரசு முடிவு செய்துள்ளதாக வெளியான செய்திகளுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
2002-03 ஆம் ஆண்டில் தனியார் மதுக்கடைகளில் நடந்த முறைகேடுகள் காரணமாகவே அரசு மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், மீண்டும் பழைய நடைமுறைக்குச் செல்வது சீர்கேடு என அவர் விமர்சித்துள்ளார்.
மதுக்கடைகளைத் தனியார் மயமாக்குவது மதுப் புழக்கத்தை அதிகரித்து இளைஞர்களைப் பாதிக்கும் என்பதால், முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.