
சிங்கப்பூர் அமைச்சர்களின் சம்பள உயர்வு காரணமாக, அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்கின் ஆண்டு வருமானம் 64 சதவீதம் அதிகரித்து ரூ.27 கோடியாக உயர்கிறது.
இந்த ஊதிய உயர்வு வரும் அக்டோபர் 15-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தனது ஊதிய உயர்வை அறப்பணிகளுக்கு வழங்கப்போவதாக வோங் அறிவித்துள்ளார்.
உலக அளவில் அதிக சம்பளம் பெறும் தலைவர்கள் பட்டியலில் சிங்கப்பூர் பிரதமர் முதலிடத்தில் உள்ளார், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆண்டு சம்பளம் ரூ.33.60 லட்சம் ஆகும்.