
ஸ்ரீவில்லிபுத்தூரில் கூலி உயர்வு மற்றும் நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலமாக வந்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற நெசவாளர்களை முதலியார்பட்டி தெருவில் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
கைத்தறித் துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகத் தெரிவித்ததை அடுத்து நெசவாளர்கள் கலைந்து சென்றனர்.