
அணு ஆயுதம் தயாரிக்கும் எந்த திட்டமும் இல்லை என்றும், சர்வதேச ஆய்வாளர்கள் தங்கள் அணுசக்தி நிலையங்களைச் சோதித்துக் கொள்ள அனுமதிக்கத் தயாராக இருப்பதாகவும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
மதத் தீர்ப்பின்படி அணு ஆயுதம் சட்டவிரோதமானது என்றும், அணு ஆயுதப் பரவலைக் கட்டுப்படுத்த யுரேனியம் செறிவூட்டலைக் குறைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேற்காசியாவில் நடக்கும் மோதல்களுக்கு அமெரிக்காதான் காரணம் என்றும், ஈரான் தற்காப்பு நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.