
செப்டம்பர் 10-ம் தேதி லண்டன் செல்லத் திட்டமிட்டிருந்த முதல்வர் விஜய், ஆளுநர் அர்லேக்கரின் அறிவுறுத்தலின் பேரில் தனது பயணத்தைத் தள்ளிவைத்துள்ளார்.
செப்டம்பர் 11 முதல் 13 வரை டெல்லியில் நடைபெறும் ப்ரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க வரும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், முதல்வரைச் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
மலேசிய பிரதமரைச் சந்திப்பதற்காகச் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.