இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தனது புதிய இண்டீ பாடலான 'ரதிமா'வை திங்க் மியூசிக் லேபிளின் கீழ் வெளியிட்டுள்ளார்.
இந்த மியூசிக் வீடியோவில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸே முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், பாடலாசிரியர் விவேக் வரிகளை எழுதியுள்ளார்.
சமகால நடன இசை மற்றும் கவாலி பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இப்பாடலுக்கு ஷைஜு காலித் ஒளிப்பதிவு செய்துள்ளார்.