
பஞ்சாப் மாவட்டங்களுக்கு இடையிலான சீனியர் ஒருநாள் போட்டியில், அமிர்தசரஸ் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மா 91 பந்துகளில் 233 ரன்கள் குவித்தார்.
இந்த அதிரடி ஆட்டத்தில் அவர் 25 சிக்சர்கள் மற்றும் 15 பவுண்டரிகளை விளாசி, 256.04 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ரன்களைச் சேர்த்தார்.
அபிஷேக் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் அமிர்தசரஸ் அணி 50 ஓவர்களில் 533 ரன்கள் எடுத்து, டார்ன் டாரன் அணியை 220 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.