நாட்டின் முன்னணி நிதி நிறுவனமான ஸ்ரீராம் ஃபைனான்ஸ் தனது ஃபிக்சட் டெபாசிட் (FD) திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
இந்த வட்டி விகித உயர்வின் மூலம் பொது முதலீட்டாளர்களுக்கு அதிகபட்சமாக 8.80% வரை வருடாந்திர வட்டி வழங்கப்படுகிறது.
மூத்த குடிமக்களுக்கு 0.50% மற்றும் பெண் முதலீட்டாளர்களுக்கு 0.10% கூடுதல் வட்டிச் சலுகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.