
சட்டசபையில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் 27 லட்சம் பேருக்கு அரசு மனை பட்டா வழங்கியுள்ளதாகவும், சென்னை மாநகராட்சியில் மட்டும் 77 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தவெக அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் 3 மாதங்களில் நிறைவேற்றவில்லை என்று விமர்சித்த அவர், எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டிய காலம் வரும் என்று பதிலடி கொடுத்தார்.