
ஏமனை நோக்கிச் சென்ற அகதிகள் படகு ஜிபூட்டி கடற்கரை அருகே கவிழ்ந்த விபத்தில் 15 குழந்தைகள் உட்பட 109 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 350 பேருடன் சென்ற அப்படகு அக்டோபர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் விபத்துக்குள்ளானதாக சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் 80 பேருக்கும் அதிகமானோர் உயிர் பிழைத்துள்ள நிலையில், மாயமான 116 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.