
கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ் அணி வீழ்த்தியது.
முதலில் பேட் செய்த ட்ரின்பகோ 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்த நிலையில், அன்டிகுவா 18.3 ஓவர்களில் 168 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.
அன்டிகுவா அணியின் சதாப் கான் 20 பந்துகளில் 52 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.