
முதலமைச்சர் விஜய் குறித்து பொதுக்கூட்டத்தில் மிரட்டல் விடுத்த வழக்கில், நிபந்தனை ஜாமீனில் உள்ள திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தூத்துக்குடி குற்றப்பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட்டார்.
ஜாமீன் நிபந்தனையின்படி கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவை யாராலும் முடக்க முடியாது என சவால் விடுத்தார்.
முன்னதாக, சட்டப்பேரவையில் தான் பேசியதை மறந்துவிடுமாறு சபாநாயகரிடம் கூறியிருந்த நிலையில், இன்று மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.