
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த ஜூன் 3 அன்று அறிமுகப்படுத்திய ஸ்பிளெண்டர்+ மற்றும் எச்எஃப் டீலக்ஸ் பிளெக்ஸ்-பியூயல் பைக்குகளின் மொத்த முன்பதிவு குறுகிய காலத்தில் 10,000 யூனிட்டுகளைக் கடந்துள்ளது.
இப்பைக்குகள் சாதாரண பெட்ரோல் முதல் 85 சதவீதம் வரை எத்தனால் கலக்கப்பட்ட (E85) மாற்று எரிபொருளிலும் தங்குதடையின்றி இயங்கும் திறன் கொண்டவை.
ஸ்பிளெண்டர்+ பிளெக்ஸ் பியூயல் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.82,710 முதல் ரூ.82,810 வரையிலும், எச்எஃப் டீலக்ஸ் மாடல் ரூ.72,792 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.