பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகை ரச்சிதா ராம் தனது பிறந்தநாளைக் கொண்டாடியபோது நடந்த ஒரு எதிர்பாராத நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொண்டாட்டத்தின் போது அருகில் வந்த ரசிகர் ஒருவர் திடீரென நடிகை ரச்சிதாவின் கன்னத்தை கிள்ளிய விடியோ இணையத்தில் பரவி வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய அந்த ரசிகர், அது தவறான தொடுதல் அல்லவென்றும் தன் அன்பின் வெளிப்பாடே அதுவென்றும் விளக்கம் அளித்துள்ளார்.