
குஜராத்தில் பருவமழையினால் பரவும் சண்டிபுரா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இந்த வைரஸ், கொசுக்கள் மற்றும் மணல் ஈக்கள் மூலம் பரவி கடுமையான மூளை அழற்சியை ஏற்படுத்துகிறது.
இந்த வைரஸ் பாதிப்புக்கு இதுவரை தடுப்பூசி அல்லது எதிர்ப்பு மருந்துகள் இல்லாததால், அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து தீவிர சிகிச்சை அளிப்பதே உயிரைக் காக்கும் வழியாக உள்ளது.