
சட்டம் ஒழுங்கு தொடர்பான சில தகவல்களை ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என்ற அரசாணையை தமிழக அரசு கடும் எதிர்ப்பை தொடர்ந்து வாபஸ் பெற்றது.
சாதி மற்றும் சமூக மோதல்கள், காவல் சித்ரவதை போன்ற விசாரணை அறிக்கைகள் விலக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதற்கு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளும் அரசியல் தலைவர்களும் இந்த உத்தரவை வாபஸ் பெற வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டனர்.