
சென்னையில் பிளஸ்-2 மாணவர் தனுஷ் உட்பட ஒரே நாளில் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பள்ளி மாணவர் கொலை வழக்கில் 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வரும் நிலையில், நேபாள வாலிபர் மற்றும் ரஞ்சன் கொலை வழக்குகளில் தலா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு மற்றும் மது போதையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலைகள் நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.