
தீபாவளியை முன்னிட்டு அமுல் நிறுவனம் தனது நெய் மற்றும் வெண்ணெய் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது, இது நுகர்வோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய விலை மாற்றத்தின்படி, 1 கிலோ நெய் ரூ.50 உயர்ந்து ரூ.680 ஆகவும், 100 கிராம் வெண்ணெய் ரூ.66 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தில் பசு நெய்க்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், சந்தையில் போலிப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வால் பிராண்டட் பொருட்களுக்கான பற்றாக்குறை நிலவுகிறது.