
தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
தற்போது லிட்டருக்கு ரூ.38 ஆக உள்ள கொள்முதல் விலை, கூட்டுறவு சங்கம் மூலம் ரூ.1 மற்றும் அரசு ஊக்கத்தொகை ரூ.2 என மொத்தம் ரூ.41 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வால் அரசுக்கு மாதம் ரூ.30 கோடி மற்றும் ஆண்டுக்கு ரூ.360 கோடி கூடுதல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.