
ஆன் கோல்டன் பாண்ட், த கவுபாய்ஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களை இயக்கிய 97 வயது ஹாலிவுட் இயக்குநர் மார்க் ரைடெல் காலமானார்.
அவர் இயக்கிய 'ஆன் கோல்டன் பாண்ட்' திரைப்படம் 10 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த நடிகர் மற்றும் நடிகை உள்ளிட்ட 3 விருதுகளை வென்றது.
லாஸ் ஏஞ்சல்ஸின் உட்லண்ட் ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்த மார்க் ரைடெல், வயது மூப்பு காரணமாக வியாழக்கிழமை உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.