
அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சிக்காக அமைக்கப்படும் பிரம்மாண்டமான டேட்டா சென்டர்கள், தங்கள் திட்டங்கள் அமையும் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் நிதிப் பலன்களை வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
டேட்டா சென்டர்களால் ஏற்படும் மின்சாரத் தேவை மற்றும் தண்ணீர் பயன்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளால் உள்ளூர் மக்களிடையே எதிர்ப்பு அதிகரித்து வரும் சூழலில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
பெரிய டேட்டா சென்டர்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தைத் தாங்களே உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், தேவைக்கு அதிகமாக உற்பத்தியாகும் மின்சாரத்தை உள்ளூர் மக்களுக்கோ வழங்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.