பயிர் கடன் முழு தள்ளுபடி செய்யாதது மற்றும் மேகதாது விவகாரத்தில் மெத்தனம் காட்டும் தமிழக அரசை கண்டித்து, அதிமுக சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் ஆகஸ்ட் 14 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட செயலர் பாலு இந்த போராட்ட அறிவிப்பை வெளியிட்டார்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மேயர் சவுண்டப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சக்திவேல், ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்க உள்ளனர்.