
கோயம்புத்தூர் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஹெல்த் கிளப் சார்பில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மனிதச் சங்கிலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மார்பகங்களில் ஏற்படும் அசாதாரணக் கட்டிகள், வலி மற்றும் தோல் மாற்றங்கள் போன்ற எச்சரிக்கை அறிகுறிகளைப் புறக்கணிக்காமல் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வலியுறுத்தப்பட்டது.
ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்து உரிய சிகிச்சை பெறுவதன் மூலம் வெற்றிவாய்ப்புகளை மேம்படுத்த முடியும் என்று மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.