
கனடாவின் மார்க்கம் நகரில் உள்ள பில் ஹோகார்த் பள்ளியில், செப்டம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 2-வது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு நடைபெறுகிறது.
தொல்காப்பியத்தை மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டுடன் தொடர்புபடுத்தி அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டில் 8 முதன்மை அமர்வுகள் மற்றும் 80-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளதால், ஆர்வலர்கள் முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.