
நடிகர் தனுஷின் அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றம் இனி 'தனுஷ் நற்பணி இயக்கம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவையில் நடைபெற்ற மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டதோடு, மன்றக் கொடியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
58 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஓம் படத்தின் ஆடியோ விழா மற்றும் அடுத்தகட்ட நலத்திட்டப் பணிகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.