
ஆப்கானிஸ்தானில் 6-ம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் கல்வி கற்க தலிபான்கள் தடை விதித்துள்ளதாக யுனெஸ்கோ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
தலிபான்கள் ஆட்சிக்கு வந்த கடந்த 5 ஆண்டுகளில் 24 லட்சம் பெண் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதோடு, தேசிய எழுத்தறிவு விகிதம் வெறும் 37 சதவீதமாக உள்ளது.
பெண் சிறார்களுக்கு கல்வி கற்பிக்க தடை விதித்ததால் பல ஆசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர், மேலும் பெண் ஆசிரியர்கள் சிறுவர்களுக்கு கற்பிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.