
சீனாவில் நடந்துவரும் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது.
இந்திய அணி தரப்பில் சிறப்பாக விளையாடிய சுப்ரியா மூன்று கோல்கள் அடித்து 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார்.
இன்று நடைபெறும் பைனலில் இந்தியா, சீனா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.