
5 முறை உலகக்கோப்பை வென்ற பிரேசில் தேசிய அணி, இந்திய அணியுடன் அக்டோபர் 3-ம் தேதி கொல்கத்தாவில் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடுகிறது.
விவேகானந்தா யுவபாரதி கிரீடங்கன் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் மார்கின்ஹோஸ் தலைமையில் கேசிமிரோ உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பங்கேற்கின்றனர்.
ஃபிஃபா தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள பிரேசில் அணியை, இந்திய அணி முதன்முறையாக இந்திய மண்ணில் எதிர்கொள்ள உள்ளது.