
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 25 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் மட்டுமே எடுத்த குல்தீப் யாதவ், 2-வது போட்டியில் நீக்கப்படுவாரா என்ற விவாதம் எழுந்துள்ளது.
சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பகுதுலே, குல்தீப் யாதவ் சிறப்பாகவே பந்து வீசுவதாகவும், ஒரே போட்டியை வைத்து அவரது திறமையை மதிப்பிட முடியாது என்றும் கூறியுள்ளார்.
மென்மையான பந்துகள் விரல் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவும், ரிஸ்ட் ஸ்பின்னரான குல்தீப் யாதவிற்கு சவாலாகவும் அமைந்ததாக பயிற்சியாளர் விளக்கமளித்துள்ளார்.