International
பாகிஸ்தானில் ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து 10 பேர் பலி

பாகிஸ்தானில் ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து 10 பேர் பலி

Daily Thanthi1h
THE BRIEF
1

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் தார்பார்க்கர் மாவட்டத்தில், அடிப்படை சுகாதார மையத்திலிருந்து மித்தி நகருக்கு ஆம்புலன்ஸில் ஒரு பெண்ணை அழைத்துச் சென்றபோது விபத்து நேரிட்டுள்ளது.

2

பிரசவத்திற்குப் பின் உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணையும் மற்றவர்களையும் வசதியாக உணரச் செய்ய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சிலிண்டரை நகற்றியபோது அது வெடித்துச் சிதறியது.

3

இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட குறைந்தது 10 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மூத்த காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.