
பிலிப்பைன்ஸ் நாட்டின் கோரோன் பகுதி அருகே 'எம்வி ஜூன் ஆஸ்டர்' என்ற பயணிகள் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
மொத்தம் 134 பேர் பயணித்த அந்தப் படகில், இதுவரை 42 பேர் மட்டுமே பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர், மீதமுள்ள 80-க்கும் மேற்பட்ட பயணிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடலோர காவல் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.