
வாஷிங்டனில் நடைபெறும் சிட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, போலந்தின் மக்தலேனாவை எதிர்கொண்ட ஆட்டத்தில் முதல் செட்டை இழந்தாலும், அடுத்த இரு செட்களை 6-3, 6-0 என வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றார்.
ஏற்கனவே காலிறுதிக்கு முன்னேறியுள்ள நவோமி ஒசாகா, இன்று இரவு நடைபெறும் போட்டியில் இத்தாலியின் எலிசாபெட்டாவை எதிர்கொள்கிறார்.