
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சேயோன்' திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மதுரையில் இன்று தொடங்கியது.
சிவகுமார் முருகேசன் இயக்கும் இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸே கதாநாயகியாக நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் முக்கிய ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட உள்ள நிலையில், இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.