
மலி ஸ்டேட் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 5,000 கோடி நிதி மோசடி வழக்கு தொடர்பாக, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள 11 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பாரத் லஜ்னா மல்டி ஸ்டேட் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டியில் பொதுமக்கள் முதலீடு செய்த நிதி மோசடி செய்யப்பட்டது தொடர்பாக, அதன் நிறுவனத் தலைவர் ஆர். பிரேம்குமார் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட வைப்புநிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டு, மனைவி மற்றும் உறவினர்களின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதால் அமலாக்கத்துறை இதில் களம் இறங்கியுள்ளது.