
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், 200-க்கும் மேற்பட்ட தொழில் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் நான்கு நாள் பயணமாக இன்று ஜப்பான் புறப்படுகிறார்.
டோக்கியோவில் ஜப்பான் அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பது குறித்து அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, ஒசாகாவில் நடைபெறும் பிசினஸ் ரோட்ஷோ நிகழ்ச்சியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் நுகர்வோர் பொருட்கள் துறை முதலீட்டாளர்களை அவர் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.