
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டை ஒன்றுக்கு ரூ.50 லஞ்சம் கேட்பதாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
லஞ்சம் கேட்டு கொள்முதல் செய்ய மறுப்பதால், கடந்த 15 நாட்களாக ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
லஞ்ச வசூல் இன்றி நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என த.வெ.க. அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.