
இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமைக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் தான் எதிரிகள் என்று ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்தி வலிமையைக் குறைக்க முயற்சிக்கும் சக்திகளை அடையாளம் கண்டு, இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொருளாதார ரீதியாக அமெரிக்க டாலர் மீதான சார்பைக் குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் சுயசார்பு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.