/nakkheeran/media/media_files/2026/09/24/gemveeramani-2026-09-24-09-47-18.jpg)
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி மீது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட போக்சோ வழக்கை கடந்த ஆட்சியில் முடித்து வைத்தது ஏன் என விளக்கமளிக்குமாறு காவல் அதிகாரிகளுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கடந்த ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கில் முன்னாள் உதவி ஆணையர் யாஸ்மின், ஆய்வாளர்கள் மகேஷ்குமார் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி முதல் ரூ.70 கோடி வரை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகளின் பின்னணியில் இந்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.