
வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் மதுபாட்டில்கள் வீசப்படுவதைத் தடுக்க, டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் தானியங்கி இயந்திரங்களை நிறுவ அரசு டெண்டர் கோரியுள்ளது.
இந்த இயந்திரத்தில் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, செல்போன் எண் மற்றும் யுபிஐ பரிவர்த்தனை மூலம் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது.
செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 5 வரை ஒப்பந்தப்புள்ளிகளைச் சமர்ப்பிக்கலாம், முதற்கட்டமாக அதிக வருவாய் ஈட்டும் நகர்ப்புறக் கடைகளில் இந்த இயந்திரங்கள் நிறுவப்படும்.