
ஈரான் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கிடைத்த உளவுத்துறை தகவலால், பிரிட்டனில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் B-1B லான்சர் போர் விமானங்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன.
இந்த விமானங்கள் மிகக் குறைந்த உயரத்தில் பறந்து எதிரியின் ரேடார்களில் சிக்காமல் தாக்கும் திறன் கொண்டவை.
அமெரிக்க ராணுவம் இது தற்காலிக ஏற்பாடு என்றும், ஐரோப்பிய பாதுகாப்பை உறுதி செய்வோம் என்றும் தெரிவித்துள்ளது.