
பிரித்தானிய லேபர் கட்சி எம்.பி. ஜெஸ் அசாடோ, தனது போலியான பாலியல் படங்களை உருவாக்கியதாக எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தின் மீது லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Grok ஏஐ சாட்பாட் மூலம் தனக்கு எதிராக பாலியல் வன்முறை தொடர்பான போலியான வீடியோ மற்றும் படங்கள் உருவாக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Grok தொழில்நுட்பத்தில் பாலியல் உள்ளடக்கங்களை உருவாக்க முடியாத வகையில் நிரந்தர மாற்றங்களைச் செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.