
பிரிட்டனின் தேசிய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்நாட்டில் 600-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.
ஹீத்ரோ, கேட்விக் உள்ளிட்ட 15 முக்கிய விமான நிலையங்களில் விமானங்கள் தாமதமாகின அல்லது ரத்து செய்யப்பட்டன, இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தற்போது தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு விமான சேவைகள் சீராகத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், இருப்பினும் ஏற்பட்ட பின்னடைவைச் சரிசெய்ய பல மணி நேரம் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.