
இந்திய டி20 அணியில் இருந்து நீக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், தனது இடத்தை மீண்டும் பிடிக்க 3 மணி நேரத்தில் 1000 பந்துகளை எதிர்கொண்டு தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பையில் கேப்டனாக இருந்த இவர், ஐபிஎல் தொடரில் சுமாராக ஆடியதால் அணியில் இருந்து நீக்கப்பட்டு, ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளைக் கருத்தில் கொண்டே இந்த அதிரடி மாற்றத்தை தேர்வுக்குழு மேற்கொண்டதாக அஜித் அகர்கர் விளக்கினார்.