
ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் எதிர்காலத்தில் மனிதர்களின் வேலை நேரம் பெருமளவில் குறையும் என்று அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் கூறியுள்ளார்.
உற்பத்தித் திறன் பெருகுவதன் மூலம் எதிர்காலத்தில் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதும் என்ற சூழல் உருவாகும் என்றும் அவர் கணித்துள்ளார்.
இந்தத் தொழில்நுட்பப் புரட்சியால் குடும்பத்தில் ஒருவர் சம்பாதித்தாலே போதும் என்ற நிலை திரும்பும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.